சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்ய 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்: டெண்டர் கோரியது தமிழக அரசு

தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யப்பட்டது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழக சட்டசபை
தமிழக சட்டசபை
Published on: 

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்த பிறகு, கடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முதன்முறையாக முழுமையாக நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. வருங்காலத்திலும் சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய தவெக அரசு உறுதியாக உள்ளது.

நேரலை செய்ய ஒப்பந்த டெண்டர்

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு நேரலை செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் விட அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2027 முதல் டிசம்பர் 2028-ம் ஆண்டு வரை சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு.

சட்டமன்ற நேரலையை ஏராளமான மக்கள் தொலைக்காட்சி, செல்போன்களில் பார்த்தனர். மக்களிடையே அமோக வரவேற்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

X