மாணவர் விடுதிகளில் உணவு, குடிநீர் குறைகளை தீர்க்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

மாணவர்களின் குறைகளை தீர்க்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
Vanni Arasu
வன்னி அரசு
Published on

தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதி விடுதிகளில் உணவு, குடிநீர் உள்ளிட்ட குறைகள் இருப்பதாக மாணவர்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர். முதலமைச்சர் விஜய், சைதாப்பேட்டையில் உள்ள விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் ஏராளமான புகார்களை அடுக்கினர். அவற்றை உடனடியாக தீர்த்து வைக்க உத்தரவிட்டார்.

மாணவர்களுடன் வீடியோ கால் வாயிலாக பேசிய அமைச்சர் வன்னி அரசு

அதனைத் தொடர்ந்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அடிக்கடி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மாணவர்கள் தங்களது குறைகளை தீர்க்கும் வகையில் புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாணவர்களிடம் வீடியோ கால் வாயிலாக அமைச்சர் வன்னி அரசு உரையாடினார்.

கிச்சடி, சேமியாவை மாற்ற மாணவர்கள் கோரிக்கை

உணவு, குடிநீர் சரியில்லை என அதிக அளவில் புகார் வருவதாக அவர் தெரிவித்தார். காலையில் வழங்கப்படும் கிச்சடி, சேமியா ஆகியவற்றை மாற்றி வழங்கவும், கீரை உணவு வழங்கவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com