சென்னையில் 2,372 நிவாரண முகாம்கள் தயார்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மாநகராட்சி மற்றும் வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
செங்கோட்டையன்
செங்கோட்டையன்
Published on: 
Summary

சென்னையில் பொதுமக்கள் தங்குவதற்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை பெறுவதற்கும் தேவையான வசதிகளுடன் 2 ஆயிரத்து 372 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:-

கனமழை

சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர், 2 முதல் 3 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாநகராட்சி மற்றும் வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

நிவாரண முகாம்கள்

சென்னையில் பொதுமக்கள் தங்குவதற்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை பெறுவதற்கும் தேவையான வசதிகளுடன் 2 ஆயிரத்து 372 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

மரங்கள் விழுதல், மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட அவசர நிலைகள் ஏற்பட்டால், 10771070112 என்ற பேரிடர் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com