சென்னை: கடந்த 3 நாட்களில் ரேஸில் ஈடுபட்ட மற்றும் பதிவெண் இல்லாத 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

வாகன சாகசத்திற்கு எதிரான தீவிர நடவடிக்கையை சென்னை போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டுள்ளது.
சென்னை: கடந்த 3 நாட்களில் ரேஸில் ஈடுபட்ட மற்றும் பதிவெண் இல்லாத 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
Published on: 

முறையான ஆவணங்கள் இல்லாதது, ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டது, வாகனப் பதிவு எண் இல்லாதது என விதிகளை மீறியதாக கடந்த 3 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சென்னை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

“ஆபத்தான வாகன சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த மூன்று நாட்களில் சென்னை முழுவதும் வாகன சாகசங்களில் ஈடுபட்ட அல்லது பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்ட 2,000 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறுவோர் மீது புகார் அளிக்கலாம்

பொதுமக்கள் தங்களுக்கு அருகில் இதுபோன்ற பைக் சாகசங்கள் நடந்தால், காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100, காவல் உதவி (Kaaval Uthavi) செயலி அல்லது சென்னை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண் 90031 30103 ஆகியவற்றின் மூலம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com