தமிழ்நாடு காவல்துறை சார்பில் தயார் நிலையில் 18 பேரிடர் மீட்புகுழு: அவசர கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மாநில பேரிடர் மீட்புக் குழுவில் ஒவ்வொரு குழுவிற்கும் 30 பேர் என்கின்ற விகிதத்தில் 540 பேர் தயார் நிலையில் உள்ளனர்.அவசர காலத்திற்காக ஆவடியில் இருந்து 3 பேரிடர் மீட்பு குழுக்கள் தற்போது கடலூர் விரைந்துள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை சார்பில் தயார் நிலையில் 18 பேரிடர் மீட்புகுழு: அவசர கட்டுப்பாட்டு அறை அமைப்பு
Published on: 

சென்னை:

பருவமழையை எதிர்கொள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மாநில மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களை அவசர காலத்தில் பாதுகாக்க 18 குழுக்களும் அதிநவீன உயர்ரக மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மாநில பேரிடர் மீட்புக் குழுவில் ஒவ்வொரு குழுவிற்கும் 30 பேர் என்கின்ற விகிதத்தில் 540 பேர் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் 3 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். திருச்சியில் உள்ள மாநில பேரிடர் குழுக்கள் தேவைக்கேற்ப திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மணிமுத்தாறு பகுதியில் 3 மாநில பேரிடர் மீட்பு குழுவும், கோவை புதூர் பகுதியில் 3 பேரிடர் மீட்பு குழுவும், பழனியில் 3 பேரிடர் மீட்பு குழுவும், ஆவடி பகுதியில் 3 பேரிடர் மீட்பு குழுவும், அதேபோல் அவசர காலத்திற்காக ஆவடியில் இருந்து 3 பேரிடர் மீட்பு குழுக்கள் தற்போது கடலூர் விரைந்துள்ளனர்.

குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவின் பேரில் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட சில மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழுவானது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com