ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

வழக்கமான ரெயில்கள் மட்டுமல்லாது சிறப்பு ரெயில்களும் நிரம்பி உள்ளதால் மக்கள் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். அதனால் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்
சிறப்பு பஸ்கள்
Published on: 
Summary

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 2,194 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ச்சியான விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கு பயணிக்கின்றனர். கூட்ட நெரிசலை குறைக்க அரசு பஸ்கள் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி 4 நாட்கள் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா மையங்களுக்கும் மக்கள் படையெடுக்கிறார்கள். 2 மாதங்களுக்கு முன்பே ரெயில்களில் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிட்ட மக்கள் இன்று வெளியூர் புறப்பட்டனர்.

சிறப்பு பஸ்கள்

வழக்கமான ரெயில்கள் மட்டுமல்லாது சிறப்பு ரெயில்களும் நிரம்பி உள்ளதால் மக்கள் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். அதனால் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் சிறப்பு பஸ் சேவை தொடங்கியது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கால நிலை பூங்கா தற்காலிக பஸ் நிலையம், மறைமலைநகர் தற்காலிக பஸ் நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இன்று வழக்கமான 2 ,191 பஸ்களுடன் 2,194 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று 755 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com