புழல் ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் மாயம்

சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் ஏரியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
புழல் ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் மாயம்
Published on: 
Summary

தீயணைப்புத் துறையினர் புழல் ஏரியில் மாயமான 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நவீன கருவிகளின் உதவியுடன் தேடுதல் பணி தொடரந்து நடைபெற்று வருகிறது.

திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் அகில் ராம் (வயது 14), அதே பகுதியைச் சேர்ந்த மோகனின் மகன் தருண் ஆகாஷ் (14), 10-ம் வகுப்பு படித்து வரும் இவர்கள். தங்களது நண்பர்கள் 3 பேருடன் நேற்று மதியம் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் புழல் ஏரிக்கு குளிக்கச் சென்றனர். மாலை 4 மணியளவில் அகில் ராய், நருள் ஆகாய் ஆகியோர் டிரீயில் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி மாயமானார்கள்.

தீயணைப்புத் துறை

இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் ஏரியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தகவலரிந்து வந்த அம்பத்தூர் உதவி கமிஷனர் குமார், புதூர் இன்ஸ்பெக்டர் சடையாண்டி மற்றும் தீயணைப்புத் துறையினர் புழல் ஏரியில் மாயமான 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நவீன கருவிகளின் உதவியுடன் தேடுதல் பணி தொடரந்து நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com