திண்டுக்கல், கொடைக்கானலில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோவில் கைது

திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் டிரைவர் சுரேசை போக்சோவில் கைது செய்தனர்.
கைது
கைது
Published on
Summary

திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

அரசு பஸ் டிரைவர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47). இவர் அரசு போக்குவரத்துக்கழக டிரைவராக பணியில் இருந்து வருகிறார். தேனியில் இருந்து திண்டுக்கல் வரும் வழித்தடத்தில் பணியாற்றி வந்தார்.

ஆத்தூர் தாலுகாவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி இந்த பஸ்சில் ஏறி திண்டுக்கல் வந்துள்ளார். திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கிய மாணவியிடம் டிரைவர் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் டிரைவர் சுரேசை போக்சோவில் கைது செய்தனர்.

போதையில் தொல்லை

கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (36). இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்தார். தனது உறவுக்கார பள்ளி மாணவி தாயாரை இழந்த நிலையில் தந்தையுடன் வசித்து வந்தார். மாணவி அடிக்கடி வீட்டுக்கு வந்த நிலையில் அவருக்கு பாலமுருகன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று போதையில் இருந்த பாலமுருகன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது தந்தையிடம் கூற பயந்து சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்களது அறிவுரையின் பேரில் சைல்டு லைன் அமைப்புக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com