

மாநகராட்சி, கடைகளை யாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்ற விவரத்தை இன்னும் எங்களுக்கோ, சங்கத்திற்கோ தெரிவிக்கவில்லை.
திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.10 கோடி செலவில் 180 கடைகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கடைகளை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படை தன்மை வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி, கடைகளை யாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்ற விவரத்தை இன்னும் எங்களுக்கோ, சங்கத்திற்கோ தெரிவிக்கவில்லை. அனைவருக்கும் ஒதுக்கிவிட்டோம் என்று கூறுகிறார்கள். முதற்கட்டமாக 180 கடைகளுக்கு ஒதுக்கீடு நடந்துள்ளது. மீன் கடைகளுக்கு இன்னும் பணம் கட்ட சொல்லவில்லை. மாநகராட்சி சார்பில் கடைகள் எண்கள் ஒதுக்கப்படாமல் தனிப்பட்ட ஒரு சில கடைகளுக்கு எண்களை ஒதுக்கி உள்ளனர். வெளி ஆட்கள் சிலருக்கு கடை ஒதுக்கப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது என்றார்.