முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி 140 ஆண்டுகள் நிறைவு

முல்லை பெரியாறு அணை நீரை பயன்படுத்தி தமிழ்நாடு தயாரிக்கும் மின்சாரத்திற்கு 1 கிலோ வாட் ரூ.12 என்ற விலையில் கேரளாவுக்கு வழங்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி 140 ஆண்டுகள் நிறைவு
Published on: 
Summary

முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தம் போடப்பட்டு இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரமுள்ள அணைப்பகுதி வனவிலங்குகள் நிறைந்த வனம், நச்சுப்பாம்புகள், ஆண்டின் பெரும்பகுதி ஓயாமல் மழை பெய்யும் இடமாக இருந்தது. எனவே இங்கு அணை கட்ட முதன் முதலில் 1887-ம் ஆண்டு செப்.21ம் தேதி முதல் கல்லை எடுத்துவைத்து ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக் தொடங்கினார்.

பல்வேறு இடர்பாடுகளை கடந்து பணிகள் நிறைவு பெற்று தற்போது வரை 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரத்தை நிவர்த்தி செய்து வருகிறது.

ஒப்பந்தம் கையெழுத்து

முல்லை பெரியாறு அணை கேரளம் மாநில எல்லையில் இருந்தாலும், அணை முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கு சொந்தமாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1886ம் ஆண்டு பெரியாறு அணையின் குறுக்கே 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அணை கட்டப்பட்டது. சுமார் 9 வருடங்களாக நடந்த கட்டுமான பணிகள் 1895ல் நிறைவடைந்தது.

இந்த அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்காக 1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் முன்னிலையில் திவான் ராம் அய்யங்கார், சென்னை மாகாணத்தின் சார்பில் கொச்சி, திருவிதாங்கூர் பொறுப்பில் இருந்த ஜான் சைல்டு ஹானிங்டன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

முக்கிய ஷரத்து

இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 999 வருடங்களுக்கு தமிழகம் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுவரை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் தான் இந்த அணை இருக்கும். அதற்கு ஈடாக கேரளாவுக்கு குத்தகை பணம் ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் என்பது உட்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

குத்தகை பணம்

இந்த ஒப்பந்தம் கடந்த 1970ம் ஆண்டு மே 20ம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போது குத்தகை பணம் ஏக்கருக்கு ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை நீரை பயன்படுத்தி தமிழ்நாடு தயாரிக்கும் மின்சாரத்திற்கு 1 கிலோ வாட் ரூ.12 என்ற விலையில் கேரளாவுக்கு வழங்க வேண்டும். 30 வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஷரத்துகள் அதில் இடம்பெற்றன.

முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தம் போடப்பட்டு இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

122 அடியை நெருங்கியது

தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 121.75 அடியாக உள்ளது. வரத்து 979 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 2925 மி.கன அடி.

71 அடி உயரம் கொண்ட வைைக அணையின் நீர்மட்டம் 51.15 அடியாக உள்ளது. வரத்து 517 கன அடி. திறப்பு 86 கன அடி. இருப்பு 2146 மி.கன அடி.

சோத்துப்பாறை அணை

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிக்கும் நிலையில் அணைக்கு வரும் 139 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.50 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 27.90 அடியாகவும் உள்ளது.

X