

இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு காவல் நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு மது அருந்தி விட்டு வாகனங்கள் இயக்கு வதை தடுப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிநேகா பிரியா உத்தரவிட்டார்.
அதன்படி சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் அறிவுறுத்தல்படி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணியரசன் மற்றும் போக்குவரத்து போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தென்பாதி, ஈசானிய தெரு, பிடாரி வடக்கு வீதி, கடைவீதி, ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை செய்த போது மது அருந்திவிட்டு இருசக்கர நான்கு சக்கர வாகனங்களை இயக்கி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல், பதிவெண் இல்லாமல் வந்த வாகனங்கள், அதிக சத்தம் எழுப்பக்கூடிய இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்ட சைலன்ஸர், மது போதையில் வாகனத்தை இயக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் 100 மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு காவல் நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது.