திருமழிசையில் 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலி

பத்து வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சல்
Published on: 
Summary

திருமழிசை ஜெகநாதபுரத்தில் 10 வயது சிறுவன் சந்தோஷ் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமழிசை ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் -மாரியம்மாள் தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகன் சந்தோஷ்(வயது 10). அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

டெங்கு காய்ச்சல்

பாஸ்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட தாய் மாரியம்மாள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வேறு ஊரில் செட்டில் ஆனதால் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார் சந்தோஷ் குமார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் சந்தோஷ் குமார். பத்து வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X