தேசிய பீச் வாலிபால்: இறுதிப்போட்டியில் தமிழக அணிகள்

ஹாலிஸ் கிளப் சார்பில் தேசிய சீனியர் ‘பீச்’ வாலிபால் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு1- தமிழ்நாடு 2 அணிகள் மோதுகின்றன.
தேசிய பீச் வாலிபால்: இறுதிப்போட்டியில் தமிழக அணிகள்
Published on

சென்னை:

ஹாலிஸ் கிளப் சார்பில் தேசிய சீனியர் ‘பீச்’ வாலிபால் போட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை பெண்கள் அரை இறுதி ஆட்டம் நடந்தது.

ஒரு அரை இறுதியில் ஷாலினி-சுப்ரஜா ஆகியோர் அடங்கிய ‘தமிழக 1’ அணி 21-41, 21-11 என்ற நேர் செட் கணக்கில் ‘தமிழக 3’ அணியை (ஆர்த்தி-சபீத்) வீழ்த்தியது.

மற்றொரு அரை இறுதியில் ஜெனீபர்-யோகேஷ்வரி ஆகியோர் அடங்கிய ‘தமிழக 2’ அணி 21.-16, 21-13 என்ற கணக்கில் தெலுங்கானாவை (லாவன்யா-ரஜிதா) வீழ்த்தியது.

இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு1- தமிழ்நாடு 2 அணிகள் மோதுகின்றன.

ஆண்கள் பிரிவு கால் இறுதி ஆட்டம் நடந்தது. ‘தமிழ்நாடு 2’ அணி 21-10, 21-15 என்ற கணக்கில் ஆந்திரா அணியை தோற்கடித்தது.

மற்ற ஆட்டங்களில் கோவா, தெற்கு ரெயில்வே அணிகள் வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com