டெல்லியில் மனித மண்டை ஓடு, எலும்புகளை தின்று தமிழக விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் இறந்த மனித மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் தின்னும் போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் மனித மண்டை ஓடு, எலும்புகளை தின்று தமிழக விவசாயிகள் போராட்டம்
Published on

புதுடெல்லி:

டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 43 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழக்ததில் கடுமையான வறட்சி, போதிய வறட்சி நிவாரணம் வழங்கவில்லை, அழிந்துவிட்ட பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வில்லை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை, கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீர் பெற்றுத்தர வில்லை,

தமிழகத்தில் நெடுவாசல், கதிராமங்கலம், வடகாடு, நல்லாண்டார்கொல்லை போன்ற ஊர்களில் விவ சாய நிலங்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக அகற்ற கோரியும் டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் 44-வது நாளான இறந்த மனித மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் தின்னும் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மோடியே, மோடியே தமிழக விவசாயிகளை மண்டை ஓட்டையும், எலும்பையும் தின்ன வைத்து விட்டாயே என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக பெண்கள் உள்ளிட்ட தமிழக விவசாயிகள் மண்டை ஓட்டையும், எலும்பையும் வாயில் கவ்வியவாறு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்தை டெல்லி வாசிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com