மருத்துவ மாணவர் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: தமிழிசை வலியுறுத்தல்

டெல்லியில் தமிழக மாணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார். #tamilisai #cbiinvestigation
மருத்துவ மாணவர் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: தமிழிசை வலியுறுத்தல்
Published on

அவனியாபுரம்:

மதுரை அழகப்பா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று பாரதீய ஜனதா மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை தாங்கினார்.

அகில பாரத அமைப்பு செயலாளர் ராமராஜூ, தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் இருந்து 43 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழநிலை குறித்தும் உள்ளாட்சி தேர்தலை அணுகுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களி டம் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா கட்சி மாற்று சக்தியாக உள்ளது. டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது.

வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மாணவர் சரத்பிரபு மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #tamilisai #cbiinvestigation

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com