காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு தீர்வு கோரி ஒன்று திரண்ட யுடியூப் பிரபலங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடந்து வருகிறது.
காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு தீர்வு கோரி ஒன்று திரண்ட யுடியூப் பிரபலங்கள்
Published on

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியத்தை காலதாமதமின்றி மத்திய அரசு அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடந்து வருகிறது.

இதில், இணையத்தை கலக்கும் தமிழ் யுடியூப் சேனல்களின் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக பேசி வருகின்றனர். #CauveryIssue #SterliteIssue #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com