புரோ கபடி - குஜராத்தை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்

குஜராத்தில் இன்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் அணி.
பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் மோஹித் சில்லார்
பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் மோஹித் சில்லார்
Published on

அகமதாபாத்:

புரோ கபடி போட்டி 7வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அகமதாபாத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 34 - 28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.

பரபரப்பாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 32-30 என்ற புள்ளிக் கணக்கில் புனே அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com