ஆற்காடு ஒன்றியத்தில் 21 வயதில் வெற்றி பெற்ற இளம் தி.மு.க. பெண் கவுன்சிலர்

ஆற்காடு ஒன்றிய பகுதிகளில் 21 வயதில் 1200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக பெண் கவுன்சிலரை கட்சியினர் பாராட்டினர்.
தீபிகா
தீபிகா
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தில் பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த இளவழகன் மகள் தீபிகா (வயது 21) பி.சி.ஏ. படித்துள்ளார்.

பட்டதாரியான இவர் தி.மு.க.வில் ஆற்காடு ஒன்றிய 2-வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு பதவிக்கு போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிட்டப்பட்டது.

இதில் இளம் வேட்பாளர் தீபா 2,344 வாக்குபெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக சுயேச்சை வேட்பாளர் லதா 1144 வாக்குகள் பெற்றார். 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தீபிகா வெற்றிபெற்றார். அ.தி.மு.க. பின்னுக்குத்தள்ளப்பட்டது.

ஒன்றிய பகுதிகளில் 21 வயதில் 1200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தீபிகாவை கட்சியினர் பாராட்டினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com