புவனகிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

புவனகிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மாதம் அவரது கணவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புவனகிரி:

புவனகிரி அருகே உள்ள சுத்துக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆர்வலன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (வயது 40). திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் ஆர்வலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் உயிரிழந்தார். இதனால், கவிதா தனிமையில் கஷ்டப்பட்டு வந்தார். அதோடு கணவரை இழந்த நாள் முதல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கவிதா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தூக்கில் பிணமாக தொங்கிய கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிதாவின் தற்காலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com