குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

காலாப்பட்டில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

பெரிய காலாப்பட்டு காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது இளைய மகள் உம்மு சல்மா (வயது 19).

இவர் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு பெரிய காலாப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதனால் உம்மு சல்மா விரக்தியில் இருந்து வந்தார். மேலும் உம்மு சல்மாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனாலும் உம்மு சல்மா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று உம்மு சல்மா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கணவர் சக்திவேல் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் அவர் வீட்டில் நைலான்கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உம்மு சல்மாவின் தந்தை அப்துல் சமது கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com