கொடைக்கானல் நகருக்குள் புகுந்த காட்டெருமைகளால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்

காட்டெருமைகள் மற்றும் வனவிலங்குகள் நகருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் நகருக்குள் புகுந்த காட்டெருமைகள்
கொடைக்கானல் நகருக்குள் புகுந்த காட்டெருமைகள்
Published on: 

கொடைக்கானல்:

கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை அடிக்கடி நகர் பகுதிக்குள் நுழைகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவதுடன் வாகனங்கள் தாக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் 2 காட்டெருமைகள் ஏரிச்சாலையில் உலா வந்தன. இந்நிலையில் பொதுமக்களை கண்டு மிரண்ட காட்டெருமைகள் அவர்களை தாக்க முயன்றன. இதன் காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அந்த காட்டெருமைகள் கே.ஆர்.ஆர். கலையரங்கம் வழியாக மெயின் சாலையில் சென்று அருகில் உள்ள தனியார் தோட்ட பகுதிக்குள் சென்று விட்டது.

இதனிடையே வனப்பகுதியை சுற்றிலும் சோலார் மின் வேலிகள் அமைக்க வேண்டும் எனவும், காட்டெருமைகள் மற்றும் வனவிலங்குகள் நகருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com