

ராணிப்பேட்டை:
வாலாஜா கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், அம்மூர் பேரூர் அ.தி.மு.க. சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வாலாஜா அருகே உள்ள தென்கடப்பந்தாங்கலில் நடந்தது.
கூட்டத்துக்கு வாலாஜா ஒன்றிய அவைத் தலைவர்கள் எஸ்.எம்.பாபு (கிழக்கு), எஸ்.சம்பத் (மேற்கு), அம்மூர் பேரூர் அவைத்தலைவர் ஏ.எல்.தேவன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாலாஜா ஒன்றிய செயலாளர்கள் வன்னிவேடு வி.கே.ராதாகிருஷ்ணன் (கிழக்கு), பெல் ஆர்.தமிழரசன் (மேற்கு), அம்மூர் பேரூர் செயலாளர் என்.கே.என்.தினகரன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் வி.கே.நிர்மலா, முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் படியம்பாக்கம் பி.மூர்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், முன்னாள் நகரசபை தலைவர் டபிள்யூ எஸ்.வேதகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., முகம்மதுஜான் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு 2021 பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகரன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கீதா சுந்தர், எம்.ஏ.சம்மந்தம், ஷாபுதீன், என்.முனுசாமி, கே.சி.சரவணன், மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆர்.வனிதா சம்பத், ஜெயந்தி நித்தியானந்தம், சாமிநாதன், பி.பி.பழனி, பாண்டியன், துரைசாமி, பரிமளா தியாகராஜன், பி.வி.மூர்த்தி, சேட்டு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சாந்தகுமாரி கோபால், சரவணன், பிரேமா கருணாகரன், முனிசாமி, சுமதி வேலு, மூர்த்தி, ஜி.சுதாகர், அம்மூர் பேரூர் நிர்வாகிகள் சண்முகம், மரகதம், மோகன், ஜெயந்தி சம்பத், ராஜா, தசரதன், மீனா, டி.ராஜா, ஒன்றிய அணி நிர்வாகிகள் ஈ.தயாளன், மகளிரணி மல்லிகா, மோகன், தாவூத்பாஷா, அண்ணாமலை, எம்.தயாளன், யுவராஜ், மருதமுத்து, ஓவியர் வெங்கட், எம்.செல்வகணபதி, ஆர்.செல்வராஜ், வன்னிவேடு ஜி.மணி, தினகரன் உள்பட மாவட்ட, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள், பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பூண்டி பிரகாஷ் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை வாலாஜா கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், அம்மூர் பேரூர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.