தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர்
தூத்துக்குடி கலெக்டர்
Published on

தூத்துக்குடி:

2021-22-ம் கல்வியாண்டுக்கு 1.7.2021 முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் பிரிவுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2021-22-ம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் பிரிவுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணத்தை தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் எந்த தொழிற்பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை வங்கி ஸ்டேட்மென்டில் அறிவதற்கு ஏதுவாக தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை (ஆர்.டி.ஜி.எஸ், என்.இ.எப்.டி) மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம், ஆய்வு கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்பள்ளிகள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, விழுப்புரம், மற்றும் சேலம் ஆகிய இடங்களில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகங்களையும், சென்னை அலுவலக தொலைபேசி எண். 044-22501006 மற்றும் detischennai@gmail.com முகவரியில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகத்தை தொலைபேசி எண்: 0462-2551251-ல் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com