வேப்பந்தட்டை அருகே கொத்தனார் தற்கொலை

வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மகன் ஜேசுதாஸ் (வயது 32). கொத்தனார். இந்நிலையில் கிறிஸ்டோபர், ஜேசுதாஸ் இருவரும் இணைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது விவசாய நிலத்தை அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை முழுமையாக அடைக்க முடியாததால் ஜேசுதாஸ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் ஆள் யாரும் இல்லாத நேரத்தில் பருத்தி செடிக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கிய நிலையில் ஜேசுதாஸ் கிடந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள், அவரை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று ஜேசுதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த ஜேசுதாசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com