காங்கிரஸ் ஆட்சியை கலைத்ததால் புதுவை மக்கள் கோபத்துடன் உள்ளனர்- வைத்திலிங்கம்

காங்கிரஸ் ஆட்சியை கலைத்ததால் புதுவை மக்கள் கோபத்துடன் உள்ளனர் என்று வைத்திலிங்கம் எம்பி கூறியுள்ளார்.
வைத்திலிங்கம் எம்பி
வைத்திலிங்கம் எம்பி
Published on

புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. நிலையான ஆட்சியை நாங்கள் கொடுத்துள்ளோம்.

புதுவையின் சுதந்திரத்தை காக்கும் கட்சி காங்கிரஸ். மக்கள் விரும்பும் அரசாக காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும்.

வாக்களித்த மக்களுக்கு எதிராக ஜனநாயக படுகொலை செய்துள்ளதை ஏற்க முடியாது. தாங்கள் வாக்களித்து தேர்வு செய்த எம்.எல்.ஏ.க்கள் தான் செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

நியமன எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சியை கலைத்ததால் மக்கள் கோபத்துடன் உள்ளனர். சட்டப்பேரவை வாக்கெடுப்பின் போது தவறான தீர்ப்பு வழங்கிய சபாநாயகரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com