வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை குட்டிகரட்டினை சேர்ந்தவர் பரிமளாதேவி(வயது 37). இவரது மகன் ராஜசேகர்(17). இவன் ஓட்டலில் இட்லி வாங்குவதற்காக குருசாமி மகன் பூமிராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றான். இட்லி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு 2 பேரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ராஜசேகர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர், பூமிராஜா இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிக்சை பலனின்றி ராஜசேகர் இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com