அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழா தொடக்கம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். தற்போது பதவியேற்பு விழா தொடங்கியுள்ளது.
ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி
ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி
Published on

வாஷிங்டன்:

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் இன்னும் சில நிமிடங்களில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிசும்

பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்கும் விழா தற்போது தொடங்கியுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், மைக் பென்ஸ் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com