தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவுடன் கூட்டு - அமெரிக்கா விருப்பம்

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தாரின் தடுப்பூசியை கூட்டாக தயாரிக்க அமெரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தாரின் தடுப்பூசியை கூட்டாக தயாரிக்க அமெரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளது.

இதையொட்டி டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி டேனியல் பி. சுமித் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க எவ்வாறு உதவுவது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்.

உலகளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. நாங்கள் இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பிற இடங்களில் உற்பத்தி நிலைகளை கவனமாக கவனித்து வருகிறோம். நாங்கள் என்ன மூலப்பொருட்களை வழங்க முடியும் என்பதைத் தீர்மானிக்க இந்திய சீரம் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். மேலும் உற்பத்தியை அதிகரிக்க தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com