தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட சில மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட சில மாவட்ட கலெக்டர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தீப் நந்தூரி
சந்தீப் நந்தூரி
Published on

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நெல்லை மாவட்ட கலெக்டராக விஷ்ணுவும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக செந்தில்ராஜூவும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக மதுசூதனன் ரெட்டியும், திருவண்ணாமலை கலெக்டராக சந்தீப் நந்தூரியும், தென்காசி மாவட்ட கலெக்டராக சமீரனும், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக கிளாட்ஸ்டோன் பொன்ராஜூவும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக தினேஷ் பொன்ராஜூம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை செயலாளராகவும், ராமநாதபுரம் கலெக்டராக இருந்த வீரராகவராவ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராகவும், தென்காசி மாவட்ட கலெக்டராக இருந்த அருண் சுந்தர் தயாளன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக இருந்த குறைதீர் சிறப்பு பிரிவு அதிகாரியாகவும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயகாந்தன் மீன்வளத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com