2020ம் ஆண்டின் போற்றப்படும் நபர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டிரம்ப், மிச்செல் ஒபாமா

2020-ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்
Published on

வாஷிங்டன்:

2020ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் தொலைபேசி வாயிலாக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 1,018 பேர் கலந்து கொண்டனர்.  

இதில் 2020ம் ஆண்டில் போற்றப்படும் நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 39 சதவீத ஆதரவுடன் முதல் இடம் பிடித்துள்ளார். 

12 ஆண்டுகளாக இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்த முன்னாள் அதிபர் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி டிரம்ப் முதல் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 15 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளார். 6 சதவீத ஆதரவு பெற்ற ஜோ பைடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

இதேபோல், பெண்களுக்கான பட்டியலில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மனைவி மிச்செல் ஒபாமா 10 சதவீதம் ஆதரவு பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மிச்செல் ஒபாமா முதல் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை தொடர்ந்து துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் 6 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், மெலானியா டிரம்ப் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com