திரிபுரா முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு

திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லாப் குமார் தேபுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிப்லாப் குமார் தேப்
பிப்லாப் குமார் தேப்
Published on

அகர்தலா:

திரிபுராவில் கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. 

இந்நிலையில், திரிபுரா மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வரும் பிப்லாப்  குமார் தேபுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிப்லாப் குமார் தேப் கூறியுள்ளதாவது:

எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com