விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைலட்

பயிற்சி விமானி ஓட்டிச் சென்ற அந்த விமானம், தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தரையில் மோதி நின்றது.
விபத்துக்குள்ளான விமானம்
விபத்துக்குள்ளான விமானம்
Published on

போபால்:

மத்திய பிரதேச்ததின் சாகர் நகரின், தானா பகுதியில் சிம்ஸ் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சிறிய ரக விமானம் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானி ஓட்டிச் சென்ற அந்த விமானம், தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தரையில் மோதியது. இந்த விபத்தில் பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக தனி குழு சென்றிருப்பதாகவும் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com