மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 103 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 105 பேர் உயிரிழந்து உள்ளனர்.
டெல்டா பிளஸ் வைரஸ்
டெல்டா பிளஸ் வைரஸ்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 3 ஆயிரத்து 643 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 6 ஆயிரத்து 795 பேர் குணமடைந்தனர். இதேபோல மேலும் 105 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். தற்போது வரை 49,924 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் உயர்ந்து வருகிறது. 

மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 27 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com