சத்துணவில் உலர் பொருட்களுடன் 10 முட்டைகள் வழங்கப்படும்- தமிழக அரசு உத்தரவு

கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன.
முட்டை
முட்டை
Published on

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை காலத்தில் சமைத்த உணவுக்கு பதிலாக உலர் பொருட்கள் மற்றும் 10 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் ‌ஷம்பு கல்போலிகர் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன.

இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு உலர் பொருட்களாக சத்துணவை வழங்க உத்தரவிடப்படுகிறது.

இதனுடன் 10 முட்டைகளும் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம் இருந்து அவற்றை பெற்று வழங்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com