திருப்பூரில் நண்பரின் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

திருப்பூரில் நண்பரின் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on: 

திருப்பூர்:

சேலம் மாவட்டம் கங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 25) இவர் திருப்பூர் அருகே அருள் புரத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தங்கவேல் தன்னுடன் வேலை செய்யும் தனது நண்பர் செல்வம் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் வந்துள்ளார்.

செல்வம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்ற போது தங்கவேல் அந்த மோட்டார் சைக்கிளை திருடி விட்டு தலைமறைவானர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தங்கவேலை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com