திருமங்கலம் அருகே லாரி மோதி சிறுவன் பலி

திருமங்கலம் அருகே லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகணியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் துரைப்பாண்டி(வயது 12). நேற்று துரைப்பாண்டி சைக்கிளில் கூடகோவிலில் இருந்து திருமங்கலம் ரோட்டில் சென்றான். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக துரைபாண்டி மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இதுகுறித்து கூடகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உலகாணியை சேர்ந்த குருநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com