திருப்பூரில் 6 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருப்பூரில் 6 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on: 

திருப்பூர்:

திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்று மதியம் காங்கேயம் ரோடு பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். காருக்குள் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் தென்காசியை சேர்ந்த ஆல்வின் ராஜா (வயது 30) என்பதும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வந்து நல்லூர் வி.ஜி.வி. கார்டனில் தங்கியிருந்து சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தது தெரியவந்தது.

தேனியில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, வாடகைக்கு கார் ஓட்டுவது போல் கஞ்சாவை விற்பனை செய்தது தெரிய வந்தது. தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்வின் ராஜாவை கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சா, காரையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com