தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை உயர்வு

தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.
மல்லிகை பூ
மல்லிகை பூ
Published on

ஆரல்வாய்மொழி:

குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு பல மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வார்கள். இங்கு முக்கிய விசேஷ நாட்களில் பூக்களின் விலை உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைந்தும் காணப்படும்.

இந்தநிலையில் நேற்று மார்க்ெகட்டில் மல்லிகை பூவின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ரூ.800-க்கு விற்பனையான மல்லிகை நேற்று ரூ.200 உயர்ந்து ரூ.1000-க்கு விற்பனையானது. இன்று (செவ்வாய்கிழமை) கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்தது.

மார்க்கெட்டில் விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.170, பிச்சி ரூ.400, முல்லை ரூ.350, சம்பங்கி ரூ.125, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.40, தாமரை(100 எண்ணம்) ரூ.2000, கோழிபூ ரூ.60, பச்சை (ஒரு கட்டு) ரூ.8, ரோஸ் பாக்கெட்(100 எண்ணம்)ரூ.40, பட்டன் ரோஸ் ரூ.160, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு)ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.75, சிவப்பு கேந்தி ரூ.80, சிவந்தி மஞ்சள் ரூ.100, சிவந்தி வெள்ளை ரூ.250, கொழுந்து ரூ.80, மரிக்கொழுந்து ரூ.120.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com