முதல் தவணை கொரோனா நிவாரணம் பெறாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக்கொள்ளலாம்- தமிழக அரசு

ரேஷனில் முதல் தவணை 2000 ரூபாய் வாங்காதவர்கள் அடுத்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:  

கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு பகுதியிலும் ரே‌ஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு மே 15 முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்பட்டது.

மீதமுள்ள குடும்பங்களில் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற காரணத்தினாலும் முகவரி மாற்றம் செய்து போக்குவரத்து வசதியின்மை காரணமாக நியாயவிலைக் கடைக்கு செல்ல இயலாத நிலையிலும் சில குடும்பங்கள் நிவாரண உதவித் தொகைபெற இயலவில்லை என அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல் தவணை கொரோனா நிதி ரூ.2,000 பெற தமிழக அரசு அவகாசம் நீட்டித்துள்ளது.

முதல் தவணை கொரோனா நிவாரணம் பெறாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com