கைது
கைது

பொக்லைன் எந்திரத்தை திருடி ஓட்டிச் சென்ற 2 பேர் கைது

பொக்லைன் எந்திரத்தை திருடி ஓட்டிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்துள்ளார். கடந்த 19-ந் தேதி வீட்டின் ஓரமாக நிறுத்தி இருந்த பொக்லைன் எந்திரத்தை மர்ம நபர்கள் யாரோ திருடி ஓட்டிச் சென்று விட்டனர். இதுகுறித்து பழனிச்சாமி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை சேர்ந்த பாலமுருகன்(வயது 27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இந்திரன்(29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பொக்லைன் எந்திரத்தை மீட்டு பழனிச்சாமியிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com