திருமங்கலம் அருகே திருமணத்திற்கு வந்த முதியவர் லாரி மோதி பலி

திருமங்கலம் அருகே திருமணத்திற்கு வந்த முதியவர் லாரி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருமங்கலம்:

சிவகங்கை மாவட்டம் கல்லூரணி அருகே கவுல் அழகாபுரியை சேர்ந்தவர் கருப்பன் (வயது65).இவர் தன்னுடைய தம்பி மாரி மகன் திருமணத்திற்காக நேற்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த எலியார்பத்திக்கு வந்திருந்தார்.

இன்று அதிகாலை தேநீர் அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலையோரம் கருப்பன் நடந்து சென்றார். அப்போது மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற கன்டெய்னர் லாரி நடந்து சென்ற முதியவர் கருப்பன் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி கருப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் லாரி நிலைதடுமாறி எலியார்பத்தி டோல்கேட்டில் மோதியது.இதனை அறிந்த அப்பகுதி மக்கள் லாரி ஓட்டுனரை கூடக்கோவில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கூடக்கோவில் போலீசார் கருப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com