டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 3வது பந்துவீச்சாளர் ஹசரங்கா

24 வயதான இலங்கையை சேர்ந்த ஹசரங்கா, தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹசரங்கா
ஹசரங்கா
Published on

சார்ஜா:

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 142 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.

இப்போட்டியின் 15-வது ஓவரை இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா வீசினார். ஹசரங்கா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில், மார்க்ரம் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின், ஹசரங்கா 18-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பிரெடோரியஸ் அடுத்த பந்திலேயே டக்-அவுட்டாகி வெளியேறினார். இதன்மூலம் ஹசரங்கா ஹாட்ரிக் (3) விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

டி20 உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் ஹசரங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அபுதாபியில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணியின் கர்ட்டிஸ் கேம்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

2007 டி20 உலக கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com