மருத்துவ குணம் நிறைந்த குண்டு பாகற்காய் சீசன் அமோகம்

அலங்காநல்லூர், வாடிப்பட்டி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ குணம் நிறைந்த குண்டு பாகற்காய் சீசன் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.120 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குண்டு பாகற்காய்
குண்டு பாகற்காய்
Published on

அழகர்கோவில்:

மதுரை அருகே காஞ்சரம்பேட்டை, அப்பன் திருப்பதி, வண்டியூர், அலங்காநல்லூர், மேலூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய் பகுதிகளில் மானாவாரியாக குண்டு பாகற்காய் பயிரிடப்பட்டது.

தற்போது அவை நன்றாக விளைந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மருத்துவ குணம் நிறைந்த இந்த பாகற்காய் முழுக்க முழுக்க கசப்பு தன்மையானது. வயிற்றில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு தன்மை நிறைந்தது. நல்ல விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த மாதம் வரை பாகற்காய் சீசன் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com