நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

நெல்லையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டதில் ஒரே நாளில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

நெல்லை:

நெல்லையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டதில் ஒரே நாளில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தலா 2 பேர் மற்ற அனைவரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மாநகர பகுதியில் 23 பேரும், பாளையில் 5 பேரும், வள்ளியூர், மானூரில் தலா 2, ராதாபுரம், நாங்குநேரி, சேரன்மகாதேவியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் பாளை பகுதியை சேர்ந்த பெண் டாக்டர், ராதாபுரத்தை 11 வயது சிறுமி, மாநகர பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், மேலும் சந்திப்பு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வசித்து வந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு 16,063 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று 19 பேர் குணமடைந்தனர். இதுவரை 15,679 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com