ராமநாதபுரம் மாவட்டத்தில் பணி நேரத்தில் வகுப்பறையில் இல்லாத அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 29 பேருக்கு நோட்டீஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் முறையாக வருவதில்லை என்ற புகார்கள் எழுந்தன.
அரசுப்பள்ளி ஆசிரியர்
அரசுப்பள்ளி ஆசிரியர்
Published on: 

ராமநாதபுரம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு தற்போது அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரையில் பொதுத் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் வகுப்புகள் முறையாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் முறையாக வருவதில்லை என்ற புகர்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டனர்.

உச்சிப்புளி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையின்போது 29 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உரிய நேரத்தில் பள்ளிகளில் இல்லாததும், வகுப்பறைகள் திறந்து வைத்து விட்டு கையெழுத்திட்டுச் சென்றதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்டோருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தியிடம் கேட்ட போது, “அரசுப் பள்ளிகளில் நடந்த திடீர் ஆய்வின்போது தலைமை ஆசிரியர்கள் சிலர் பணி நேரத்தில் வெளியே சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com