உடன்குடி வட்டாரத்தில் விடிய, விடிய மழை

உடன்குடி வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை
மழை
Published on

உடன்குடி:

உடன்குடி வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, பெரிய புரம், மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, கொட்டங்காடு, உதிரமாடன்குடியிருப்பு, கந்தபுரம், நேசபுரம், லட்சுமிபுரம், வேத கோட்டவிளை, சீர்காட்சி, பிச்சிவிளை, நயினார்பத்து, நயினார்புரம், தண்டுபத்து, வெள்ளாளன்விளை, அத்தியடி தட்டு, 

வட்டன்விளை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று காலை சுமார் 8 மணி வரை இடி, மின்னலுடன் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அக்னி நட்சத்திர கோடை வெயில் தாக்கம் குறைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com