புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்- டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

5 மாநில தேர்தல் கள நிலவரம் தொடர்பாக டைம்ஸ்நவ்-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
புதுச்சேரி சட்டசபை
புதுச்சேரி சட்டசபை
Published on

புதுடெல்லி:

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும் வெளியாகத் தொடங்கி உள்ளன. அவ்வகையில் தேர்தல் கள நிலவரம், மக்களின் மன நிலை தொடர்பாக டைம்ஸ்நவ்-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 12 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2016 தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி 12 இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com