4 நாட்கள் சுற்றுப்பயணமாக பெங்களூரு சென்றடைந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு சென்றடைந்தார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- எடியூரப்பா
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- எடியூரப்பா
Published on

பெங்களூரு:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார். அவரை கவர்னர், முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (வெள்ளிக்கிழமை) மாலை பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து பெங்களூருவிலேயே தங்கும் அவர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மடிக்கேரிக்கு சென்று ஜெனரல் கரியப்பாவின் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com