ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

தலிபான்கள் வசம் வந்துள்ள ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி, அதிபர் புதின்
பிரதமர் மோடி, அதிபர் புதின்
Published on

புதுடெல்லி:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அமெரிக்கா தான் காரணம் என உலக நாடுகள் பலவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றதற்காக வருந்தவில்லை என்றும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் கூறி வருகிறார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று பேசினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அதில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com