அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு விழா அமெரிக்க பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. துணை அதிபராக கமலா ஹாரிசும், அதிபராக ஜோ பைடனும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள். இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டாட்சியை மேம்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com